Sunday, May 27, 2018

பெண்கள் பற்றிய அற்புதமான வார்த்தைகள்

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள். இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். 

அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்துஉடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். 

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டுமா?” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். 

அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். 

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். 

மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்த அளவுக்கு ஒரு பெண்ணால் யோசிக்க முடியுமா?” என்று தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்றார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.


*பெண்மையை மதிப்போம்.

நரைமுடியை கருமையாக்க

நரைமுடியை போக்கி தலைமுடியை கருமையாக்க சில எளிய முறை , இதனை பின்பற்றலாமே...
தேவையான பொருட்கள்:

  1. பீட்ருட் சிறிய சைஸ்
  2. காபி பவுடர் - 3 ஸ்பூன்
  3. அரைத்த 10 செம்பருத்தி
  4. எலுமிச்சை

பீட்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும். 

சுண்டியதும் சிறிது நேரம் சூடு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

பின்னர் அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும். 

இதுபோன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூடிய விரைவில் நரைமுடி கருமையாக மாறிவிடும்.

Saturday, May 26, 2018

எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில்(எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: HR Specialist - 01

பணி: HR Specialist (Manpower Planning) - 01

பணி: Internal Comminication Specialist - 01

தகுதி: மனிதவளத் துறையில் எம்பிஏ, பிஜிடிஎம், சந்தையியல், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக் கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ண்பிப்பதற்கான கடைசி தேதி: 02.06.2018

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...