Thursday, May 24, 2018

மெட்டி அணிவதால் கிடைக்கும் நன்மைகள்

மெட்டி அணிவது ஏன்?



பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும்.

ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளதாம்.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். 

கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். 

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். 

காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மெட்டி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

Wednesday, May 23, 2018

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் வேலை

பேங்க் ஆஃப் பரோடா பைனான்சியல் சொல்யூஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பதவி: ஏரியா சேல்ஸ் மேனேஜர்

கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்பிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 8 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: டீம் லீடர்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 
5 ஆண்டுகள் முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Gradutes

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஓராண்டு முன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிகியூடிவ் - Under Gradutes

தகுதி: பட்டப்படிப்பில் முதலாமாண்டு முடித்து இன்னும் முழு படிப்பையும் முடிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறு நிதி நிறுவனங்களில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் சேல்ஸ் பிரிவில் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: சேல்ஸ் எக்ஸிக்யூடிவ் - Freshers

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 வயதிலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பதவி: மேலாளர்/ உதவி மேலாளர் - புராஸஸிங்

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஹெச். ஆர். ஆபரேஷன்ஸ் துறை/ எம்ஐஎஸ் துறை/ நிதித்துறையில் குறைந்தது 8 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதிலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலியிடங்கள்: சேல்ஸ் எக்ஸ்கியூட்டிவ் -500, டீம் லீடர்ஸ்-65, ஏரியா சேல்ஸ் மேனேஜர் -25


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரங்கள், மதிப்பெண் பட்டியல், அனுபவம் உள்ளிட்டவை அடங்கிய பயோ-டேட்டாவைத் தயார் செய்து, salesforce.bob@bobcards.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்பும்போது, எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறோம் என்ற விவரத்தை Subject என்னும் இடத்தில் குறிப்பிட வேண்டும்.

மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி: 25.05.2018.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் வேலை

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பதவி: மெடிக்கல் ஆபிஸர்

காலியிடங்கள்: 445

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.5.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...