Wednesday, May 23, 2018

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் வேலை

மத்திய அரசில் மெடிக்கல் ஆபிஸர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மத்திய பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

பதவி: மெடிக்கல் ஆபிஸர்

காலியிடங்கள்: 445

தகுதி: எம்பிபிஎஸ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி பிரிவினர் மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.5.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : http://www.upsc.gov.in/sites/default/files/Notification-CMSE-2018-Engl.pdf

Tuesday, May 22, 2018

என் ஆள பார்க்க போறேன் - கயல்

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…
என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேச போறேன்…

அவன் கண்ணுக்குள்ள,
என்னை வைக்க போறேன்.
அவன் நெஞ்சுக்குள்ள,
என்னை தைக்க போறேன்.
நானே…. என்னை…தர போறேன்!

வீட்டுவிட்டு வந்துட்டேனு,
சொல்ல போறேன்.
கூட்டிகிட்டு போயிடுனு,
சொல்ல போறேன்.
இதை தான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து’
என சொல்லி,
ஆசையில், அல்லடுவான்!
மனம் துள்ளி காதலில் தள்ளடுவான்!
அதனா பார்த்தே, அழ போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்…

உன்னால் தான் தூங்கலைனு,
சொல்ல போறேன்!
சோறு தண்ணி சேரலைனு,
சொல்ல போறேன்!
புதுசா புளுகாம, ரொம்ப பெருசா வழியாம,
அடி எப்ப நீ எனக்கு பொண் ஜாதியா
ஆக போறேன்னு ? அப்பாவியா
நானே… கேட்டு… வர போறேன்!

என் ஆள பார்க்க போறேன்…
பார்த்த செய்தி பேசப் போறேன்...

வருமான வரித் துறையில் , தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பு

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி:Inspector of Income-tax - 07

சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 + தர ஊதியம் ரூ.4,600 (PB-2)

பணி: Tax Assistant - 11

தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Multi-Tasking Staff - 14

தகுதி:பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400(PB-1) வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை:விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

மேலும் சம்மந்தபட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய :https://www.tnincometax.gov.in/download.php?a=1&filename=image1_2018-05-195aff7c8e2693c.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...