Sunday, May 20, 2018

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணி

இந்திய ரயில்வே பாதுகாப்பு படையில் சுமார் 20 ஆயிரம் காவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில், இந்திய ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) மற்றும் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படையில் (ஆர்பிஎஸ்எஃப்) காலியாக உள்ள 2018-19 ஆண்டிற்கான 9 ஆயிரத்து 739 காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு பணிக்காக காத்திருக்கும் இரு பாலரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரும் ஜூன் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொத்த காலியிடங்கள்: 9739

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி: Constable & Sub Inspector

2018-19 Zone Wise RPF/ RPSF Sub Inspector (SI) Vacancy Details:




தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் ஆண் விண்ணப்பத்தாரர்கள் 165 செ.மீ உயரமும், பெண் விண்ணப்பதாரர்கள் 157 செ.மீ உயரமும் பெற்றிருக்க வேண்டும்.


சம்பளம்: மாதம் ரூ.21,700 வழங்கப்படும்.


வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, அளவீட்டு தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மூலம், சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்குமுறை: http://constable.rpfonlinereg.org  மற்றும் https://si.rpfonlinereg.org/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 01.06.2018

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2018


Saturday, May 19, 2018

மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Accounts Assistant - 01

சம்பளம்: மாதம் ரூ.10,000

தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Programme Manager -01 

சம்பளம்: ரூ.35,000

தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருப்பதுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.05.2018 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலாளர் / ஆணையர், 
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம், 
சமூகப் பாதுகாப்பு துறை, 
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, 
கெல்லிஸ், சென்னை-10, 
தொலைபேசி: 044-264221358


மேலும்விபரங்களுக்கு:http://cms.tn.gov.in/sites/default/files/announcement/TNSCPS_recruitment_140518.pdf

துறைமுகத்தில் லோயர் டிவிஷன் கிளார்க் வேலை

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகக் கழகத்தில் காலியாக உள்ள லோயர் டிவிஷன் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் மே-31க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: லோயர் டிவிஷன் கிளார்க்

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.16,300 - 38,200

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கில்டு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.vocport.gov.in/port/userinterface/Recruitment.aspx அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களிலும் அட்டெஸ்ட் செய்து அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Secretary,
V.O.Chidambaranar Port Trust,
Tuticorin-626 004.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.05.2018

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...