Monday, May 14, 2018

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை டிரெய்னி, இளநிலை அலுவலர், உதவி அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 12

பணி: Management Trainee, Junior Officer, Assistant Officer (R & D and QC)

தகுதி: வேதியியல் துறையில் எம்.எஸ்சி, பொறியியல் துறையில் "Pulp and paper Technology" பிரிவில் பி.இ அல்லது பி.டெக் பட்டம் அல்லது அறிவியல் துறையில் இளநிலை பட்டத்துடன் "Pulp and paper Technology" முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இளநிலை அலுவலர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் மேற்கண்ட தகுதியுடன் 3 ஆண்டு பணி அனுபவமும், உதவி அலுவலர் பணிக்கு 5 ஆண்டு பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,900 - 17,100

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா மற்றும் அட்டெஸ்ட் செய்த தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

General Manager(HR), 

Tamilnadu Newsprint and Palers Limited, 

Kagithapuram - 639136, Karur.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.05.2018

சென்னை ICF -இல் ஆய்வக உதவியாளர், செவிலியர் வேலை

சென்னையில் செயல்பட்டு வரும் Integral Coach Factory-இல் காலியாக உள்ள ஸ்டாப் நர்ஸ் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 07

பணி: Staff Nurse

காலியிடங்கள்: 06

தகுதி: 3 ஆண்டு General Nursing and Midwifery முடித்து Nurse & Midwife -ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது B.Sc (Nursing) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Lab Assistant

காலியிடங்கள்: 01

தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் டூ தேர்ச்சியுடன் DMLT அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.icf.indianrailways.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு இணைத்து அஞ்சலில் அனுப்ப வேண்டும். 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

SPO/G, ICF,
Shell Division,
Chennai - 600 038.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.05.2018

மேலும் விவரங்களுக்கு: www.icf.indianrailways.gov.in

இந்திய ரயில்வேயில் , குரூப் சி மற்றும் குரூப் டி பணி

இந்திய ரயில்வேயின் வடமேற்கு ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் சி மற்றும் குரூப் டி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Group"C" (Socuts & Guides Quota)

காலியிடங்கள்: 03

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ மற்றும் பிளஸ் டூ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: Group "D" (Socuts & Guides Quota)

காலியிடங்கள்: 08 தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Socuts, Guides, Rover, Ranger, Himalayan Wood Badge பெற்றிருக்க வேண்டும். 

தேசிய மற்றும் இந்திய ரயில்வே அளவில் நடைபெற்ற ஏதேனும் இரண்டு நிகழ்வுகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

 வயதுவரம்பு: 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: 6வது சம்பளக்குழு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு தேர்வு, Socuts & Guides தகுதிகள் மற்றும் மருத்தவு பரிசோதனையின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவு விண்ணப்பதாரர்களும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.ner.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.05.2018


மேலும் முழுமையான விவரங்களுக்கு: www.ner.indianrailways.gov.in

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...