Thursday, May 3, 2018

பெல் நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (BEL) காலியாக உள்ள 6 துணை பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Engineer

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000

வயதுவரம்பு: 31.03.2018 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்கவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

Sr Dy General Manager (HR), 
Bharat Electronics Limited,
I.E.Nacharam, Hyderabad - 500076


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : 


தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை

தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

பணி: திட்ட ஒருங்கிணைப்பாளர் - 01

கல்வித் தகுதி: எம்பிஏ (ஹெச்.ஆர்/ ஆபரேஷன்/ நிதி) முடித்திருக்க வேண்டும். 

கணினியில் எம்எஸ்-ஆபிஸ் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். 

முக்கிய நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.


பணி: அக்கவுண்ட்ஸ் எக்ஸிக்யூடிவ் - 02


கல்வித் தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸ் மற்றும் டேலி படித்திருக்க வேண்டும். 

முக்கிய நிறுவனங்கள்/ வர்த்தக நிறுவனங்களில் குறைந்தது 5 முதல் 7 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.niwe.res.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Deputy Director General (F&A),
National Institute of Wind Energy, 
Velachery - Tambaram Main Road, 
Pallikaranai, Chennai-600100.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 07.05.2018. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://niwe.res.in/assets/Docu/recruitment/Advt_for_project_coordinator&accounts_executive_16.04.2018.pdf

ரயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான கொங்கன் ரயில்வே கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 113 ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிக்கை எண்.CO/P-R/03/2018

மொத்த காலியிடங்கள்: 113

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Station Master - 55
2 Goods Guard - 37
3 Accounts Assistant Cey -11
4 Senior Clerk Cey - 10

தகுதி: சீனியர் கிளார்க் பணிக்கு பி.காம் முடித்தவர்களும், மற்ற பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதர பணிகளும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும். 

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள், ரூ.250 கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.konkanrailway.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய: http://konkanrailway.com/uploads/latestnews/NTPC_3_2018.pdf


தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...