Thursday, April 5, 2018

நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் மாணவர் சேர்க்கை



மத்திய பண்பாட்டு அமைச்சகத்தின்கீழ், தன்னாட்சி கல்வி நிறுவனமாக புதுடில்லியில் செயல்படும், என்.எஸ்.டி., எனும் நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்பு:

 டிப்ளமா இன் டிராமாடிக் ஆர்ட்ஸ் - 3 ஆண்டுகள்

தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

18 முதல் 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகள் விலக்கு உண்டு.

சேர்க்கை முறை: 

மாணவர் சேர்க்கையில் இரண்டு விதமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 

முதல்நிலை :

 செயல்முறை தேர்வில் வெற்றி பெறவேண்டும். 

இரண்டாம் நிலை:

ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சி தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்விரு நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக, நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்படுவர்.

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு மாதம் 8 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 16

சென்னையில் தேர்வு நடைபெறும் நாள்: மே 22

விபரங்களுக்கு:https://nsd.gov.in/

Wednesday, April 4, 2018

5,ooo வருடங்கள் வற்றாத.. ஒரு சின்ன கிணறு



5 ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட இக்கிணற்று நீரை, உலகில் வாழும் பெரும்பாலான இஸ்லாமியர்கள் அருந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள்.

மெக்காவிற்கு புனித பயணம் செய்யும் பல தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்கள், இந்த கிணற்று நீரை குறைந்தது 20லிட்டராவது எடுத்து தனது நாட்டிற்கு கொண்டு செல்லாமல் இருக்க மாட்டார்கள்.

அப்படிப்பட்ட அற்புதமான இந்த ‘ஜம் ஜம்’ கிணற்றை பற்றி தெரிஞ்சுக்குவோம்.

சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஐரோப்பிய மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவுதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள்.

இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவீன ராட்சத பம்பு செட்டுகளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால், நீரின் அளவு குறையவில்லை.

மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர்தண்ணீரை இடவேளையின்றி ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

நல்ல நீர் வளம் உள்ள ஒரு பெரிய கிணற்றில் உள்ள நீரை ஒரு வருடம் எடுக்கும் அளவு, ஒரே நாளில் ‘ஜம் ஜம்’ கிணற்றில் இருந்து எடுக்கப்படுவது மிகப்பெரியஅதிசயம்.

அதை விட அதிசயம் 691.2 மில்லியன் நீரை தினமும் எடுத்தப்போதும், இதன் அளவு குறைவதில்லை.

சுவையும் மாறியதில்லை. ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள்.

அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.

குறைந்த ஆழம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் ஏரிகளோ, கண்மாய்களோ, குளம், குட்டைகளோ இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இப்படி நீராதாரம் இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால், இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை.இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன.

ஆனால், ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும்.

Tuesday, April 3, 2018

வறட்டியில் இருக்கும் விஞ்ஞானம்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!

அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?

ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?

அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.!

அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.

18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.

மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.

வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .

நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!

நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...

அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...