Monday, April 2, 2018

இயற்கை எரிவாயு நிறுவனத்தில் வேலை

நமது நாட்டின் இயற்கை எரிவாயு கண்டுபிடித்தல், உற்பத்தி மற்றும் பிரித்தெடுத்தலில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு 'யூ.ஜி.சி., - நெட்' தேர்வு அடிப்படையில் காலியாக இருக்கும் எக்சிகியூடிவ் பணியிடங்களை, நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள் : 

எச்.ஆர்., பைனான்ஸ் அண்டு அக்கவுண்ட்ஸ் ஆபிசர், அபீசியல் லாங்குவேஜ் ஆபிசர் ஆகிய பிரிவுகளில் எக்சிகியூடிவ் பணியிடங்கள் உள்ளன. 

வயது : 

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

எச்.ஆர்., பிரிவுக்கு எம்.பி.ஏ., படிப்பை எச்.ஆர்., பிரிவிலும், முதுநிலை பட்டப் படிப்பை பர்சனல் மேனேஜ்மெண்ட், லேபர் வெல்பேர் பிரிவில் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பைனான்ஸ் அண்டு அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு எம்.பி.ஏ., (பைனான்ஸ்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் அபீசியல் லாங்குவேஜ் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ச்சி முறை : 

யூ.ஜி.சி., நெட் தேர்வு மதிப்பெண்கள், நேர்காணல் மதிப்பெண்கள், கல்வித் தகுதிக்கான மதிப்பெண்கள் என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2018 ஏப்., 27.

விபரங்களுக்கு :

விமான துறையில் 542 இன்ஜினியர் பணி


நமது நாட்டின் விமான நிலையங்களைப் பராமரிப்பதில் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் ஏ.ஏ.ஐ., அமைப்பு பிரசித்தி பெற்றது. இங்கு 542 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

காலியிட விபரம்:

ஜூனியர் எக்சிகியூடிவ் பிரிவில் சிவிலில் 100ம், எலக்ட்ரிகலில் 100ம், எலக்ட்ரானிக்சில் 330ம், ஆர்க்கிடெக்சரில் 12ம் காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: 

பி.இ., அல்லது பி.டெக்., முழு நேரப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் 'கேட் 2018' தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : 

ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

கட்டணம்:  ரூ. 300. 

கடைசி நாள் :  27/04/2018

விபரங்களுக்கு:

சாலைப் போக்குவரத்து துறையில் அப்ரெண்டிஸ் பணி

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்து அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1967ல் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் ரோடு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நிறுவப்பட்டது. இங்கு டெக்னீசியன் அப்ரென்டிஸ் பிரிவிலான காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிரிவு :

 மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி :

மெக்கானிகல் இன்ஜினியரிங் பிரிவில் மூன்று வருட டிப்ளமோ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம் : 

ஒரு வருட காலத்திற்கான பயிற்சி. 

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தங்கள் 'ரெஸ்யூமை' பின்வரும் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். Mail Id: pers@cirtindia.com 

கடைசி நாள் : 2018 ஏப்., 11.

விபரங்களுக்கு :  www.cirtindia.com/pdf/BOAT-AdvertismentWebsitemarch2018.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...