Sunday, November 23, 2025

தமிழ் மணி - Antique Tamil Bell

 

தமிழ் மணி என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல மணி. இது மிசினரி வில்லியம் சேலேன்சோ என்பவரால் 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனை நியூசிலாந்தில் வன்ங்காரை நோர்த்லாந்து பிராந்தியத்தில் மாவோரி பெண்கள் உருளைக்கிழங்குகள் அவிக்கும் பாத்திரமாக பயன்படுத்திவந்தனர்.


இந்த மணி 13 செமீ உயரமும் 9 செமீ அகலமும் உடையது. அதைச் சுற்றிலும் பழங்கால தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் முகையிதீன் பக்ஸ் கப்பல் மணி எனும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 

இந்த எழுத்துகள் நவீன எழுத்துக்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்படவில்லை. மணி 500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. இதன் கண்டுபிடிப்பு, அக்காலத்தில் நியூசிலாந்துக்கு தமிழர்களின் கப்பல்களின் வருகையை எடுத்துக்காட்டுகிறது. 


மேலும் மாவோரியர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் வர்த்தக தொடர்பு இருந்தது என்பதற்கு இது எடுத்துக்காட்டாக அமையலாம்.


இப்போது இந்த மணி நியூசிலாந்தில் உள்ள ரே பாபா தேசிய கண்காட்சியகத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது.

Monday, November 17, 2025

கார்த்திகை மாதத்தின் முக்கிய சிறப்புகள்

🔥கார்த்திகை மாதம் – தமிழரின் ஒளி நிரம்பிய பாரம்பரியம்!

தமிழ் ஆண்டின் எட்டாவது மாதமான கார்த்திகை,
ஒளி, ஆன்மிகம், அன்பு மற்றும் தமிழர் பண்பாட்டின் மிகச் சிறப்பான காலம்.

இந்த மாதம் முழுவதும் தீ விளக்கு, திருவிழா, அறிவு — இவை ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன.

🌟 கார்த்திகை மாதத்தின் 7 முக்கிய சிறப்புகள்

திருக்கார்த்திகை தீபம்

இருளை அகற்றி ஒளியை வரவேற்கும் மிகப் பழமையான தமிழ் திருவிழா.
வீட்டின் முன், குளம், வாசல், தெரு—எங்கும் மண் விளக்குகள் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை மகாதீபம்

அருணாசல மலையின் உச்சியில் ஏற்றப்படும் “மகாஜோதி” —
சிவனின் அக்னி-தத்துவத்தை குறிக்கும் உலகப் புகழ்பெற்ற பாரம்பரியம்.

 முருகனின் சக்தி மிகும் மாதம்

கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த முருகப் பெருமானின் திருநாள்.
கந்த சஷ்டி அனுபவத்திற்குப் பின் வரும் ஆன்மீக நிறைவு.

விண்மீன் தொடர்பான தமிழர் அறிவு
கார்த்திகை நக்ஷத்திரம் = பிளையட்ஸ் (அழகிய தீ விண்மீன் குழு).
பழந்தமிழர்கள் நட்சத்திரங்களை வைத்து காலமும் வேளாண்மையும் கணித்தார்கள்.

வீடு, மனம், வாழ்க்கை – ஒளியின் சுத்தம்
இந்த மாதத்தில் விளக்கு ஏற்றுவது

👉 வீட்டு நலன்
👉 கிருமி நாசனம்
👉 மன அமைதி

என அனைத்தையும் குறிக்கும் ஒரு தமிழ்ச் சின்னம்.

பெண்களின் கார்த்திகை நோன்பு

குடும்ப நலன், செல்வம், நீண்ட ஆயுள், ஒற்றுமை
என பல நன்மைகளை வேண்டி பெண்கள் வழிபடும் நாள்.

உணவுப் பாரம்பரியம் – இனிப்புகள் & அன்பு

கார்த்திகை அப்பம்
பொரி உருண்டை
எல்லாத் தரப்பு மக்களும் சுவைப்பதற்கான மரபு உணவுகள்.


Saturday, August 4, 2018

டிஆர்டிஓ-வில் சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் வேலை |

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (டிஆர்டிஓ) நிரப்பப்பட உள்ள 494 சீனியர் டெக்னீக்கல் உதவியாளர் "பி" பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அனைத்துறையைச் சேர்ந்த தகுதியான டிப்ளமோ, பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.:  CEPTAM-09/STA-B

மொத்த காலியிடங்கள்: 494

பணி: Senior Technical Assistant ' B ' (STA ' B' )

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Agriculture - 04
2. Automobile Engineering - 06
3. Botany - 03
4. Chemical Engineering - 13
5. Chemistry - 24
6. Civil Engineering - 04
7. Computer Science - 79
8. Electrical & Electronics Engineering - 16
9. Electrical Engineering - 35
10. Electronics & Instrumentation - 07
11. Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engg - 100
12. Geology - 03
13. Instrumentation - 05
14. Library Science - 11
15. Mathematics - 08
16. Mechanical Engineering - 140
17. Metallurgy - 08
18. Photography - 02
19. Physics - 16
20. Psychology - 05
21. Zoology - 05

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 29.08.2018 தேதியின்படி 18 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். அரசுவிதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2018

மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.drdo.gov.in/drdo/ceptam/download/poster_ceptam09_stab.pdf

தமிழ் மணி - Antique Tamil Bell

  தமிழ் மணி   என்பது உடைந்த நிலையில் காணப்படும் பழங்காலத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல   மணி. இது மிசினரி   வில்லியம் சேலேன்சோ   என்பவரால் 1836 ஆம...